திருக்கயிலாய பரம்பரை மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பீடாரோஹணத் திருநாள்.

நாள்:- கார்த்திகை மாதம் 19-ந் தேதி, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4, 2020).

இவ்விழாவை முன்னிட்டு, dharisanam.com இணையதளத்தின் இயக்குனர் A.V. முத்துக்குமாரசாமி அவர்கள் குருமகா சந்நிதானத்திற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.

அதுசமயம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் dharisanam.com இணையதளத்தின் மற்றுமொறு இயக்குனரான M. பரணி அவர்கள், I.A.S. தேர்வில் தேர்ச்சி அடைந்ததையும் கலெக்டராக பணி நியமனம் பெற்றதையும் பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து ஆசி வழங்கினார்கள்.

இந்தியாவின் தொன்மையான சைவத் திருமடங்களுள் ஒன்றாகவும், சைவமும் தமிழும் இனிதே தழைத்தோங்குக என்ற கோட்பாட்டுடன் சமய வளர்ச்சியிலும், தமிழ் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வரும் ஆதீனமாகவும் விளங்குகிறது தருமபுரம் ஆதீனம்.

இந்த ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சமீபத்தில் முக்தியடைந்ததையடுத்து, ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஞானபீடம் ஏற்றார்.

27-ஆவது குருமகா சந்நிதானம் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டம் பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.Phil பட்டத்தையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் PhD பட்டத்தையும் பெற்றவர்.

இவர் 50-க்கும் மேற்பட்ட சமய நூல்கள், சிறுவெளியீடுகளை பதிப்பித்தவர். 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர்.

 40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்குச் சென்று சைவ சமய, சமுதாய, இலக்கியப் பணிகளை மேற்கொண்டவர்.